Kia Sonet ஃபேஸ்லிப்ட் X-Line வேரியன்ட்டின் மிரட்டலான தன்மையைக் காட்டும் 7 படங்கள்

published on டிசம்பர் 20, 2023 05:18 pm by rohit for க்யா சோனெட்

  • 141 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய கியா செல்டோஸ் X-லைன் வேரியன்டிலிருந்து கேபின் மற்றும் அப்ஹோல்ஸ்டரிக்கான கிரீன் நிற டச்களுடன் ஸ்டைலிங் மற்றும் வடிவமைப்புக்கான உத்வேகத்தைப் பெற்றுள்ளது.

2024 Kia Sonet X-Line

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா சோனெட் காரின் ஃபுல்லி லோடட் வேரியன்ட்களின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் நமக்கு கிடைத்தது. கியா உள்ளேயும் வெளியேயும் சில மாற்றங்களைக் கொடுத்துள்ளது, ஆனால் முன்பு இருந்த அதே வேரியன்ட் லெவல்களுடன் தொடர்கிறது. இதில் டெக் (HT) லைன், GT லைன் மற்றும் X-லைன் ('எக்ஸ்க்ளூசிவ் மேட் கிராஃபைட்' ஷேடில் ஃபினிஷ் செய்யப்பட்டது) ஆகியவை அடங்கும். இந்தக் கட்டுரையில், விரிவான படங்களில் டாப்-ஆஃப்-லைன் X-லைன் வேரியன்ட்டை பார்க்கலாம்:

வெளிப்புறம்

2024 Kia Sonet X-Line headlights and grille

சோனெட் X-லைன் -ன் முன்பக்கம் சோனெட் GTX+ போன்று இருக்கின்றது. இது பிளாக் கிரில் (அதே சில்வர் இன்செர்ட்களுடன் இருக்கும்) மற்றும் கீழ் ஏர் டேம் இன்னும் கிளாஸி ஃபினிஷ் உள்ளது. சோனெட் X-லைன் -ன் கிரில்லை சுற்றி GTX+ வேரியன்ட்டின் அதே 3-பீஸ் LED ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் LED DRL -கள் பம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன, இதில் நேர்த்தியான LED ஃபாக் லைட்களும் உள்ளன.

2024 Kia Sonet X-Line alloy wheel

சோனெட் X-லைன் GTX+ உடன் பொதுவான மற்றொரு பிட், 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் வடிவில் உள்ளது. நீங்கள் கூர்ந்து கவனித்தால், GTX+ சில்வர் நிறத்தில் இருக்கும் போது, ​​பாடி சைட் கிளாடிங்கின் இன்செர்ட்டுகள் கிளாஸி பிளாக் நிறத்தில் இருப்பதையும் உங்களால் பார்க்க முடியும்.

2024 Kia Sonet X-Line rear

புதிய செல்டோஸில் இருந்து ஈர்க்கப்பட்ட கனெக்டட் LED டெயில்லைட்களுடன் அதன் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஏற்கனவே ‘சோனெட்’ பேட்ஜை கொண்டிருந்தாலும், இது டெயில்கேட்டில் பிரத்தியேகமான ‘X-லைன்’ அடையாளத்தையும், ஸ்கிட் பிளேட்டிற்கான பிளாக் கலரையும் பெறுகிறது.

உட்புறம்

2024 Kia Sonet X-Line cabin

சோனெட் X-லைன் -ன் GTX+ வேரியன்ட்டின் கேபின் அமைப்பில் கியா பல மாற்றங்களைச் செய்யவில்லை, பிளாக் மற்றும் சேஜ் கிரீன் தீம் மற்றும் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைக் கொடுக்கிறது, இது ஃபேஸ்லிப்டட் செல்டோஸ் X-லைனில் உள்ள அதே ஃபார்முலா ஆகும்.

2024 Kia Sonet X-Line powered driver seat
2024 Kia Sonet X-Line 10.25-inch digital driver display

ரேஞ்ச்-டாப்பிங் வேரியன்ட் என்பதால், கியா, 4-வே பவர்டு டிரைவர் இருக்கை, 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 360-டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற புதிய மற்றும் பிரீமியம் அம்சங்களைக் கொண்டுள்ளது.

2024 Kia Sonet X-Line rear seats

ஏசி வென்ட்கள், கப்ஹோல்டர்களுடன் கூடிய ஆர்ம்ரெஸ்ட், இரண்டு Type-C USB போர்ட்கள், பின்புற சன்ஷேடுகள் பின்புறத்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு கிடைக்கும். மேலும் அனைத்து பயணிகளும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள் மற்றும் ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் போன்ற அம்சங்களைப் பெறுவார்கள்.

Sonet X-Line ஆனது 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் (120 PS/172 Nm) மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் (116 PS/250 Nm) ஆப்ஷன்களுடன் மட்டுமே கிடைக்கிறது. X-லைன் வேரியன்ட் உடன், முதலாவது 7-ஸ்பீடு DCT -யுடன் மட்டுமே கிடைக்கும், மற்றொன்று 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

தொடர்புடையது: புதிய மற்றும் பழைய கியா சோனெட்: இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன ?

எப்போது விற்பனைக்கு வரும்?

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா சோனெட் ஜனவரி 2024 -ல் அறிமுகப்படுத்தப்படும் என்று நாங்கள் நினைக்கிறோம். கியா இதன் விலையை ரூ. 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). ரேஞ்ச்-டாப்பிங் வேரியன்ட, புதிய சோனெட் X-லைன் ரூ. 14 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கலாம். அப்டேட் செய்யப்பட்ட எஸ்யூவி மஹிந்திரா XUV300, மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், மற்றும் மாருதி ஃப்ரான்க்ஸ் கிராஸ்ஓவர் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.

மேலும் படிக்க: 2023 -ல் இந்தியாவில் கியாவில் அறிமுகமான அனைத்து புதிய அம்சங்கள்

மேலும் படிக்க: சோனெட் ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது க்யா சோனெட்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • போர்டு இண்டோவர்
    போர்டு இண்டோவர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • டாடா curvv
    டாடா curvv
    Rs.10.50 - 11.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஆகஸ, 2024
  • மஹிந்திரா போலிரோ 2024
    மஹிந்திரா போலிரோ 2024
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: நவ,2024
  • மஹிந்திரா thar 5-door
    மஹிந்திரா thar 5-door
    Rs.15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூன, 2024
  • டாடா curvv ev
    டாடா curvv ev
    Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூல, 2024
×
We need your சிட்டி to customize your experience